பறக்காத சிறகுகள்!









மனிதர்களில் இரண்டு வகை உண்டு.

திரை பாத்திரங்கள்
உணர் பாத்திரங்கள்

நாம் கண்களால் பார்க்கும் பாத்திரங்கள் அனைத்தும் திரை பாத்திரங்கள் தான். திரைப்படத்தில் நாம் காணும் பாத்திரங்களுக்கு என்ன அளவுகோள் உண்டோ அதே தான், உங்களை சுற்றி நீங்கள் பார்க்கும் மனிதர்களும். இந்த பாத்திரங்களால் உண்மையில் உங்களுக்கு மகிழ்ச்சியையோ அல்லது நெருக்கடியையோ தரவே முடியாது. வேண்டுமானால் சிரிப்பு, பயம், ஆகிய இரண்டையும் காட்ட முடியும். ஆனால் அதுவும் சில காலங்களுக்கு மேல் நீடிக்காது.

எவ்வித பாதிப்பையும் நிரந்தரமாக ஏற்படுத்தாத, புகையை போல வந்து மறையும் தன்மை கொண்டவை தான் இந்த திரைப்பத்திரங்கள். எதையும் உணர முடியாத, எதை தந்தாலும் தனக்கு வரையுறைக்கப்பட்டிருக்கும் வட்டத்திற்குள் நின்று அசைந்துவிட்டு மறையும் தன்மை கொண்டவை தான் இந்த திரைப்பாத்திரங்கள். மலையை மூடி இருக்கும் பனி போல, நெருப்பில் இருந்து உருவாகும் புகை போல. 

மனிதனுக்கு ஏற்படும் ஏமாற்றம், துயரம், மனக்கவலை, தோல்வி, துரோகம், பயம் ஆகிவைவற்றை முன் நின்று நடத்துவது மனம் தான். மனம் யாரால் ஈர்க்கப்படுகிறது, சான்றிதழ் கொடுக்கிறது, சொந்தம் கொண்டாடுகிறது, தலை மேல் தூக்கி வைத்துக் கொள்கிறது, காதல் கொள்கிறது என்று ஆழ்ந்து சிந்தித்தால் திரை மனிதர்கள் நம் கண்களுக்கு தெரிவார்கள்.

புகைப்படலத்திற்கு சிலை எழுப்பியதே தவறு, பின்னர் சிலையில் இருந்து அருள் வரவில்லை என்று தன்னை தானே அழித்துக் கொள்வதில் மனம் காட்டுகிற முனைப்பு ஆபத்தானது. திரை மனிதர்களை நீங்கள் எங்கும் காணலாம். நீங்கள் பழகி வரும் 100ல்,  95 விழுக்காடு பேர் திரை மனிதர்களாக தான் இருப்பார்கள். அவர்களை பாருங்கள், சிரியுங்கள், கைத்தட்டுங்கள், அங்கமாக்காதீர்கள்.

உணர் பாத்திரங்கள் பின்னர்...