நான் தான் பாலியல் குற்றவாளி பேசுகிறேன்!



நான் ஒரு பாலியல் குற்றவாளி. தடித்த உருவம், கருப்பு மேனி, பணம் இல்லை, அசிங்கமானவன் என முத்திரை குத்தப்பட்டவன், வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதவன், சுருக்கமாக சொன்னால் இழப்பதற்கு எதுவும் இல்லை என்னிடம், இது தான் நான்.!






மதம், சினிமா!

சிறு வயது முதல் மூன்று எழுத்து நடிகர்களின் முத்த காட்சிகள், காமரசம் வழியும் பாலியல் காட்சிகளில் ஊறி திளைத்து கனவில் குடித்தனம் நடத்துபவன். நான் எப்போது வயதுக்கு வந்தேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஒருநாள் காலை எனது பிறப்புறுப்பு உள்ளாடை ஈரமாக இருந்தது. அன்று தொடங்கி சிறுநீர் கழிப்பதை விட மற்ற விஷயங்களுக்கு என் பிறப்புறுப்பை நான் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது .படிப்போ அல்லது பொது புத்தகங்களின் வாசனையோ இல்லாத எனக்கு, மதம் மற்றும் சினிமா தான் என் உலகம். இவைகளில் இருந்து தான் ’செக்ஸ்’ என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன்.





தாதா காந்தி, மாமா நேரு, கடவுளை ஏசும் பெரியார், இது தான் எனக்கு தெரிந்த பொது அறிவு. மற்றப்படி நெய் மனம் வீசும் பெருமாள் கோவில் முதல் சாராய நெடி வீசும் அய்யனார் கோவில் வரை நான் போகாத இடம் இல்லை. இருட்டிலே வாழும் எனக்கு வெளிச்சத்தின் மீது தீராத காதல் வெறி. ஒரு வருட இருட்டு வாழ்க்கைக்கு பதில் ஒருநாள் வெளிச்ச வாழ்க்கை கிடைக்குமானால், எதுவும் செய்யத்தூண்டும் மனம் எனது நிரந்தர சொத்து. பெண் என்பவள் ஆண்களுக்கு அடிமை, அவள் ஆண்களின் போகப்பொருள். பெண்ணை துன்புறுத்துவதில் இருக்கும் இன்பத்தை எனக்கு சினிமா ஊட்டியது. அவள் கதறும் சத்தம் எனக்கு மட்டும் ஏனோ மெல்லிசையாக ஒலித்தது. அவள் வலியின் கண்ணீர் என்னை ஆண்மையின் உச்ச பரவசநிலைக்கு கொண்டு சென்றது.
                   
பெண்களை மதிக்க மதமோ அல்லது சினிமாவோ எனக்கு கற்றுத்தரவில்லை. மாறாக டூபீஸ் அணிந்து குத்தாட்டம் போடும் இளம்பெண் மீது சாராயம்  ஊற்றி நக்கிக் குடிக்கும் கதாநாயகன் தான் என் உதாரணபுருஷன்.






என்பக்க ஞாயம்! 

ஒருவனை எந்த எல்லைக்கும் சென்று அவமானப்படுத்தும், நிர்மூலமாக்கும், ஒரு பைசா பாக்கி இன்றி சுரண்ட நினைக்கும் சமூகத்திற்கு என்னை கேள்வி கேட்க அருகதை இல்லை.என்னிடம் இருப்பது தன்மானம் மட்டும் தான். அதையும் நீ பறித்துக் கொண்டால் என்னிடம் இழப்பதற்கு எதுவும் மிச்சமில்லை. இழப்பதற்கு ஏதுவும் இல்லாத ஒருவனுக்கு ஒழுக்கம் எதற்கு?. பிணத்திற்கு பீசா ஆடர் செய்து என்ன பலன்,

எல்லா பெண்களையும் சகோதரிகளாக, மகளாக பார்க்க வேண்டும் என சொன்னால், அவர்கள் என்னை சகோதரனாக ஏன், சக மனிதனாக கூட பார்த்ததில்லையே. என் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்த இந்த உலகில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவர்களை இழக்கக்கூடாது என்ற நினைப்பில் இது நடந்திருக்காதே.

குற்றவாளியை சிறையில் அடைத்து தனிப்படுத்துவதின் மூலம் இது நிற்கபோவதில்லை.ஒவ்வொரு ஆண்மை முறுக்கிய திருமகனும் தனக்கான நேரத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறான்.ஆசிரியர், அண்ணன், தம்பி, நண்பன், தந்தை, சாமியார், பாதரியார், உறவினர், பக்கத்துவீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன், ஜோசியக்காரன், முக்கியமாக சினிமாகாரன், ஆன்மீகவாதி, அரசியல்வாதி இவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை நீச்சயம் போலீசால் காப்பாற்ற முடியாது .

"Every man is a potential rapist!"



 வருவேன்

No comments