எது நல்ல மீன்: நம்பியார் காலத்து டெக்னிக் இதோ!
நல்ல மீன்களை எப்படி கண்டுபிடிப்பது!
மிக சுலபம். பூச்சிக்கள் தான் நம் உணவுக்கு தர சான்றிதழ் அளிக்க வல்லவர்கள். அரிசியில் இருக்கும் வண்டு, மாம்பழத்தில் இருக்கும் பால் புழு, கீரையின் அடித் தண்டு பகுதியில் இருக்கும் மண் புழு உள்ளிட்ட சர்வவகை பூச்சிக்கள் நமது உணவின் தரத்தை நமக்கு மறைமுகமாக புரியவைக்கின்றன.அதேபோல நல்ல மீன்களை கண்டுபிடிக்க நமக்கு உதவுகிறது ஈக்கள். நீங்கள் வாங்கும் மீன்களில் ஈக்கள் சுற்றினால், அதன் அர்த்தம் அந்த மீன் தற்போது தான் பிடிக்கப்பட்டது என்பது. ரசாயனம் தடவிய மீன்கள் மீது ஈக்கள் அமர்வதில்லை.
- ஃபார்மலின் என்பது அதிக நெடி வீசக்கூடியது. புதிய மீன்கள் மீது அதிக நெடி வீசாது. வெறும் உப்பு வாசனை மட்டும் வீசினால் அது நல்ல மீன்.
- மீன்களின் கண்களை பாருங்கள். புதிய மீன்களின் கண் தெளிவாக இருக்கும். பழைய அல்லது ரசாயனம் செலுத்தப்பட்ட மீன்களின் கண் விழிகள் வெள்ளைதிரை படர்ந்து இருக்கும்.
- மீன்களை கடலோரத்தில் இருக்கும் கடைகளில் வாங்குவது நல்லது. கடலோரம் வசிக்காதவர்கள் தங்களது மீன் வியாபாரியுடன் நல்ல நட்பில் இருந்து தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.
- அதிகாலைப்பொழுதில் மீன்வாங்குவது நல்லது.
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்கறிகளை விட மீன்கள் தான் பிரதான உணவாக உள்ளது இன்றும். ஐயோடின் தொடங்கி விட்டமின்-ஏ, டி, ஃபாஸ்பரஸ், மெக்னிசியம், செலெனியம் உள்ளிட்ட நல்ல சத்துக்கள் இதன் மூலம் நமக்கு கிடைக்கும். கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சி உணவுகளை விட மருத்துவர்களும் மீன் சாப்பிடுவதை ஊக்குவிக்க காரணம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு மீன்களில் நிரம்ப இருக்கிறது.
No comments
Post a Comment