கல்யாணம் - பாலியல் அடிமைக்கான தேடல்!



பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் தனக்கான பாலியல் அடிமையை ஒப்பந்த அடிப்படையில் வைத்திருக்கும் பழக்கம் இருந்துள்ளது.அந்த ஒப்பந்தமுறையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மத குருமார்கள், தங்களுக்கு ஏற்றவகையில் சடங்களுடன் கூடிய ஒப்பந்தத்தை உருவாக்கினர்.

மனித நாகரிகத்தின் ஆரம்பத்தில் ஆண், பெண் இருவருமே தங்களுக்கான உணவை வேட்டையாடி உண்டு வந்தனர். ஒரு அடிப்படை நட்பு இருவருக்கு மத்தியிலும் இருந்தது. பசி, வலி, தாகம், உள்ளிட்ட உணர்ச்சிகள் தனித்தனியே ஏற்பட்டது. ஆனால் பாலியல் உணர்வை இன்னொருவருடன் இணைந்து தான் தனிக்க முடியும் என்ற ரீதியில் தான் உடலுறவு தொடங்கியது.




குழந்தை வளர்ப்பில் ஆரம்பம் முதலே ஆர்வம் செலுத்தாத ஆண்கள் கூட்டமாக தனியே வாழ்ந்து வந்தனர். குழந்தைகளை வளர்ப்பது முதல் அனைத்தையும் இன்று போலவே பெண்களே கவனித்து வந்தனர்.

ஆண் குழந்தை பிறந்து விட்டால் அதனை வளர்த்து, பின்னர் ஆண்கள் கூட்டத்திற்கு அனுப்பி வைக்க தாய் எனும் பெண் பிரிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிரிவை எதிர்கொள்ள தயங்கிய பெண், தன்னால் உருவாக்கப்பட்ட உயிருடன் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக ஆணுக்கு காலம் முழுக்க பாலியல் அடிமையாக இருக்க ஒப்புக்கொண்ட சமரசம் தான் பின்னாளில் கல்யாணம் என்ற போர்வையில் இன்றளவும் நடந்து வருகிறது.

இன்றைக்கும் இந்தியா போன்ற வளர்ந்த நாகரிகம் இருப்பதாக நம்பப்படும் நாட்டில் கல்யாணம் என்பது பாலியல் உறவுக்கு முந்தய சடங்கு தான்.




உண்மையில் கல்யாணம் யாருக்கு தேவை:

இந்தியாவை பொறுத்தவரை கல்யாணம் என்பது மதத்தின் வளர்ச்சிக்கு தேவை. சாதியின் சக்திக்கு தேவை. மதம் மற்றும் சாதி ஆகியவைகளுக்கு தங்களுக்கான கூட்டம் என்பது தான் ஆணிவேர். அதனை கல்யாணம் தொடர்ந்து காலம் காலமாக பூர்த்தி செய்து வருகிறது.

இதனை புரிந்து கொள்ளாமல், நமக்காக கல்யாணம் செய்து கொள்வதாக நினைத்துக்கொண்டு அதனை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது இன்றைய சமூகம். உண்மையில் உடலுறவு என்பதை எடுத்துவிட்டால் கல்யாணத்திற்கும் மனிதர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இந்தியாவில் பெற்றோரால் நடத்தப்படும் கல்யாணங்களின் எண்ணிக்கை 70 சதவீதம். அமெரிக்காவில் 50 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.இந்தியாவில் இன்னும் அந்த நிலை இல்லை. ஆனால் அதற்கான பாதையில் தான் இந்தியாவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.


வரும்











   

No comments